கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பின் காந்த மனிதனாக மாறிய நபர்!

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பின் காந்த மனிதனாக மாறிய நபர்!

  • மகாராஷ்டிராவில் உள்ள நபர் ஒருவர் காந்த மனிதனாக மாறி உள்ளார்.
  • உடலின் காந்த தன்மைக்கு காரணம் கொரோனா தடுப்பூசி இல்லை என மருத்துவர்கள் தகவல். 

மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் வசித்து வரக்கூடிய நபர் ஒருவர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்டதற்கு பின்பதாக அவரது கைகள் காந்த தன்மையுடையதாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. அவரது உடலில் எந்த ஒரு பொருட்களை வைத்தாலும் அதில் ஒட்டிக் கொள்கிறதாம். இதுக்கும் தடுப்பூசி எடுத்துக்கொண்டு சம்பந்தம் ஏதும் இருக்காது என ஆய்வாளர்கள் தெரிவித்தாலும், இதுகுறித்து மருத்துவர்கள் தற்பொழுது ஆய்வு செய்து வருகின்றனர். 71 வயதுடைய அரவிந்த் சோனார் எனும் இந்த நபருக்கு கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது.

மேலும் கடந்த ஜூன் இரண்டாம் தேதி இரண்டாவது டோஸ் தடுப்பூசியை இவர் எடுத்துக்கொண்டுள்ளார்.  ஆனால், முதல் டோஸ் தடுப்பூசியை அரசு மருத்துவமனையிலும், இரண்டாம் டோஸ் தடுப்பூசியை தனியார் மருத்துவமனையிலும் எடுத்துள்ளார். அதன் பின் ஊசி போட்ட கையில் எல்லா இரும்பு பொருட்களும் தானாக ஒட்டிக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.  எனவே அவர் அதிர்ந்து போய் தனது மகனிடம் கூறியதாகவும், அதன்பின் வீட்டில் உள்ள மற்ற இரும்பு பொருட்களை அவர் மீது ஒட்டவைத்து பார்த்தபோது அவர் காந்தம் போல மாறி இருப்பதும் தெரிய வந்ததுள்ளது.

மருத்துவர்களுக்கு அழைத்து இவரது சூழ்நிலை குறித்து எடுத்துச் சொன்ன முதியவர் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட பின்பு இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டு உள்ளது என கூறியுள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் அவரது வீட்டிற்கு நேரில் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது இது உண்மைதான் என தெரிய வந்துள்ளது. ஆனால், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை. இதுவரை மகாராஷ்ட்ராவில் 3.5 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளனர். அவர்கள் யாருக்கும் இல்லாத இந்த அரிய வகை நோய் இவருக்கு இருப்பதற்கான காரணம் என்ன ஒரு புறம் ஆராய்ச்சி நடைபெறுகிறது.

மேலும் சில மருத்துவர்கள் இது குறித்து கூறும் பொழுது உடலில் இரும்பு பொருட்கள் ஒட்டுகிறது என்றால் அது கவனிக்கப்பட கூடிய ஒன்றுதான், காந்த சக்திக்கு மட்டுமே இரும்பு பொருட்களை ஈர்க்க கூடிய தன்மை உள்ளது. ஆனால் மனித உடலில் இரும்பு ஒட்டுவது சாத்தியம் இல்லை. இருப்பினும் ஏன் இவர் உடலில் இந்த தன்மை இருக்கிறது என்பதை ஆய்வு செய்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் எனவும், ஆனால் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும்  இவர் உடலில் காந்தம் ஓட்டுவதற்கு எந்த சம்மந்தமும் இருக்காது என கோரியுள்ளார். ஏனென்றால், இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு கூட இது போன்ற அறிகுறி இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube