27 C
Chennai
Saturday, October 23, 2021

வடிவேலு பட பாணியில் அனைத்து சின்னத்திலும் வாக்களித்த நபர்-அதிர்ச்சியடைந்த வேட்பாளர்கள் ..!

விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியத்தில் வாக்குச்சீட்டில் உள்ள எல்லா சின்னங்களிலும் வாக்களித்து வடிவேலு காமெடியை நிஜமாக்கிய வாக்காளர்.

தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றன. இதில் பதிவான வாக்குகளை எண்ணிக்கை பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் கானை ஒன்றியத்தில் வாக்காளர் அளித்த வாக்கு சீட்டை பார்த்து அனைத்து வேட்பாளர்களும் அதிச்சியடைந்தனர். காரணம் கானை ஒன்றியத்தில் வாக்காளர் ஒருவர் வடிவேலு பட பாணியில் உங்ககிட்ட வாங்குன காசுக்கு உங்களுக்கு ஒரு குத்து; அவங்ககிட்ட வாங்குன காசுக்கு அவங்களுக்கு ஒரு குத்து என வாக்கு சீட்டில் இருந்த 5 சின்னத்தில் 4 சின்னங்களுக்கு வாக்களித்து இருந்தார்.

இந்த வாக்கு சீட்டை பார்த்த அனைத்து வேட்பாளர்களும் அதிச்சியடைந்தனர். ஒரே சீட்டில் 4 சின்னங்களுக்கு வாக்களித்து இருந்ததால் வாக்கு செல்லாது என அதிகாரிகள் அறிவித்தனர். 

spot_imgspot_img

Hot Topics

Read More