கர்நாடக முதல்வர் யார்.? காங்கிரஸ் தலைமையின் தற்போதைய நிலைப்பாடு என்ன.?

கர்நாடக முதல்வர் யார்.? காங்கிரஸ் தலைமையின் தற்போதைய நிலைப்பாடு என்ன.?

Siddaramaiah and DK Shivakumar

கர்நாடகா புதிய முதல்வர் யார் என கட்சி தலைமை அலுவலகத்தில் இன்றும் முக்கிய தலைவர்கள் மத்தியில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் ஆகியும், 135 தொகுதிகளை வென்று கூட்டணி ஆதரவு இன்றி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி இன்னும் புதிய முதல்வர் யார் என அறிவிக்காமல் இருந்து வருகிறது.

முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது இருவருமே காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டனர். மல்லிகார்ஜுன கார்கே இந்த ஆலோசனை குறித்து ராகுல் காந்தி உடன் ஆலோசித்து இன்று மாலை அல்லது நாளை முடிவு வெளியாகும் என காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா செய்தியாளர்களிடம் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே தெரிவித்து விட்டு சென்றார்.

டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா என இருவரில் ஒருவருக்கு முதல்வர் பதவியும், மற்றொருவருக்கு 2 முக்கிய துறைகளுடன் துணை முதல்வர் பதவி மற்றும் மாநில தலைமை பதவி ஆகியவை கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது காங்கிரஸ் தேசிய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதால் விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube