அடிக்கடி கத்தியதால் பசுமாட்டை பயங்கரமாக தாக்கிய உரிமையாளர்.!

மதுரை அருகே பசுமாடு சத்தம் போட்டதால் மாட்டின் உரிமையாளர் பயங்கரமாக

By bala | Published: Jul 07, 2020 06:36 PM

மதுரை அருகே பசுமாடு சத்தம் போட்டதால் மாட்டின் உரிமையாளர் பயங்கரமாக மாட்டை தாக்கியுள்ளார்.

மதுரை மாவட்டம் ஜெயந்திநகரை சேர்ந்தவர் முத்துக்கணி இவர் தனது வீட்டில் 10 பசுமாடுகள் வளர்த்து வருகிறார், மேலும் நேற்று தனது வீட்டிற்கு வெளியே ஒரு பசுமாடு மட்டும் நீண்ட நேரமாக கத்திக்கொண்டுள்ளது, இதனால் கோபமடைந்த பசுமாடு உரிமையாளர் முத்துக்கணி வேகமாக சென்று கீழே இருந்த கட்டையை எடுத்து பசுமாட்டை பயங்கரமாக தாக்கியுள்ளார்.

இதனால் அந்த பசுமாடு வலியால் தவித்து வலி தாங்கமுடியாமல் மயங்கி கீழே விழுந்தது, மேலும் அவர் தாக்கிய அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, மயங்கி விழுந்த பிறகும் மாட்டை கயிறை வைத்து கட்டி அடித்து துன்புறுத்தியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc