சொந்த சிறுநீரகத்தையே புதுப்பித்து மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர்..!

சொந்த சிறுநீரகத்தையே புதுப்பித்து மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர்..!

முதன்முறையாக ஐக்கிய அரபு நாடுகளில் சொந்த சிறுநீரகத்தையே புதுப்பித்து மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் நோயாளி ஒருவர்.

ஐக்கிய அரபு நாட்டில் அலி ஷம்சி என்பவருக்கு சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இவர் பிறக்கும் போதே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்துள்ளார். தற்போது இவருக்கு 60 வயதாகிறது. அதனால் சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இவரது உடலிலிருந்து சிறுநீரகத்தை எடுத்து உடல் உறுப்புகளை பாதுகாக்கும் திரவத்தில் வைத்துள்ளனர்.

பின்னர், இவரது சிறுநீரகத்தில் இருக்கும் கட்டியை சிறப்பாக அகற்றி, அதை தையல் போட்டு சரி செய்துள்ளனர். அதன் பிறகு, அலி ஷம்சிக்கு கட்டி நீக்கப்பட்ட சரி செய்த அவருடைய சிறுநீரகத்தையே மீண்டும் பொருத்தியுள்ளனர். பின்னர் அதனை செயல்பட வைத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சை 11 மணி நேரங்கள் நடைபெற்றுள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாவது, அலி ஷம்சிக்கு ஏற்கனவே சிறுநீரகத்தின் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதனால் இவரது சிறுநீரகத்தையே வெளி எடுத்து சரி செய்து பொருத்த முடிவு செய்ததாக கூறியுள்ளனர்.

Join our channel google news Youtube