அறிவுரை கூறியதால் கழுத்தில் கத்தி வைத்த கிரிக்கெட் வீரர்- பயிற்சியாளர் தகவல்.!

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரான்ட் பிளவர் இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார், மேலும் தற்பொழுது இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கிறார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை கூறியுள்ளார், அதில் பாகிஸ்தான் அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகரன்கள் குவித்த கிரிக்கெட் வீரர் யூனிஸ்கான் பற்றி கூறியுள்ளார், ஆவர் கூறியது யூனிஸ்கான் பேட்டிங் செய்த சாதனையை என்னால் நெருங்ககூட முடியாது, பாகிஸ்தான் அணியில் அவரை கையாள்வது மிகவும் கடினமாக இருந்தது.

கடந்த 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் போட்டியின் மதிய உணவு சாப்பிடும் பொழுது நான் யூனிஸ்கானிற்கு சில அறிவுரைகளை வழங்கினேன் ஆனால் அதை அவர் கண்டு கொள்ளவில்லை மேலும் திடீரென எனது கழுத்தில் கத்தியை வைத்தார் உடனடியாக நான் அச்சம் அடைந்தேன்,அப்பொழுது அங்குள்ள மிக்கி ஆர்தர் உடனடியாக விரைந்து வந்து பிரச்னையை முடித்துவைத்தார், என்றும் கிரான்ட் பிளவர் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.