சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளது – மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளது.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் மூன்றாவது இடத்தில உள்ள இந்தியாவில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை, 1,855,331 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 38,971 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள் கூறுகையில், இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு, டெல்லி, திரிபுரா, கோவா போன்ற மாநிலங்களில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.