இஸ்ரேலில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்தது..!

இஸ்ரேலில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

உலக நாடுகளை கொரோனா பெருந்தொற்று பெருமளவு பாதிப்புகளையும், சேதங்களையும் ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,005,511 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று 10 லட்சம் மேல் பாதித்த நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் 35 ஆவது இடத்தில் உள்ளது.

இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,864 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 9,26,075 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இஸ்ரேலில் தற்போது 72,572 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி இதுவரை 63.2 விழுக்காடு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.