டெல்லியில் ஒரே நாளில் 2,084 பேருக்கு கொரோனா..பாதிப்பு எண்ணிக்கை 85,000-ஐ கடந்தது.!

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தோற்றால் 2,084 பேர் பாதிக்கப்பட்ட

By gowtham | Published: Jun 30, 2020 01:49 PM

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தோற்றால் 2,084 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 85161 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 2,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 85,161 ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 3,306 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை  56,235 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,680  ஆக அதிகரித்துள்ளது. மேலும்,  26,246 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Step2: Place in ads Display sections

unicc