ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனு நிராகரிப்பு.! காரணம் இதுதான்….

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட செந்தில் முருகன் என்பவர் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கு தாக்கல் செய்யும் கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிட அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 70க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

வேட்புமனு ஏற்பு : இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு விட்டது. தற்போது வெளியான தகவலின் படி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகன் என்பவர் தாக்கல் செய்த வேட்புமனுவானது தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு நிராகரிப்பு : அதாவது, வேட்புமனுவில், அந்த தொகுதியை சேர்ந்த 10 வாக்காளர்கள் முன்மொழிந்து கையெழுத்திட வேண்டும். அப்படியான முன்மொழிவு சரியாக இல்லை என அவர் தாக்கல் செய்த 2 வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஓபிஎஸ் தரப்பில் நாங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு தடையாக இருக்க மாட்டோம் என்று விலகி கொள்வதாக அறிவித்து விட்டனர் என்பது குறிப்பிட தக்கது. ஆதலால், இந்த வேட்புமனு நிராகரிப்பு என்பது பெரிய அளவிலான பாதிப்பினை ஏற்படுத்தாது என்றே கூறப்டுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment