பார்வதி மேனனின் அடுத்த அவதாரம்.!

பிரபல மலையாள நடிகை மற்றும் தனுஷின் மரியான் பட நடிகையான பார்வதி மேனன் இயக்குநராக

By ragi | Published: May 30, 2020 01:22 PM

பிரபல மலையாள நடிகை மற்றும் தனுஷின் மரியான் பட நடிகையான பார்வதி மேனன் இயக்குநராக களமிறங்குகிறார் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பார்வதி மேனன் . இவர் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனுஷின் மரியான், கமலின் உத்தமவில்லன், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வரவேற்பைப் பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பதிலிருந்து சிறிய இடைவெளியை எடுத்து டைரக்ஷன் கற்றுக் கொள்வதற்காக வெளிநாடு சென்றிருப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போது இவர் இயக்குநராக களமிறங்குவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஊரடங்கு நேரத்தில் இரண்டு திரைக்கதைகளை உருவாக்கி தயாராக வைத்திருப்பதாகவும், அதில் ஒன்று அரசியல் பின்னணி நிறைந்த கதை என்றும் , மற்றொன்று சைக்காலஜிக்கல் திரில்லர் கலந்த கதையம்சத்தை கொண்டது என்றும், ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பார்வதி மேனன் கூறியுள்ளார். மேலும் இவை இரண்டையும் தனது திரையுலக நண்பர் ஒருவருடன் இணைந்து இயக்க போவதாகவும், அதற்கான தயாரிப்பு திட்டங்களை தொடங்கி விட்டதாகவும் கூறியுள்ளார். விரைவில் இதற்கான கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்று கருதப்படுகிறது.

Step2: Place in ads Display sections

unicc