ராக்ஸ்டார் இசையில் அடுத்த ஹிட் சாங்.! “டிப்பம் டப்பம்” பாடல் நாளை வெளியீடு.!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்.” இந்த படத்தை ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளனர். அந்த வகையில், தற்போது படத்தின் நான்காவது பாடல் நாளை வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே படத்திலிருந்து வெளியான  ரெண்டு காதல், Two Two Two, நான் பிழை ஆகிய பாடல்கள் அனிருத் இசையில் வெளியாகி ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தது. இந்த பாடல்களை தொடர்ந்து தற்போது டிப்பம் டப்பம் என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.