அதிரடியாக வரும் புது வாட்ஸப் அப்டேட் ! இனி இரண்டு நாட்கள் வரை

By

வாட்ஸாப்பில் ஒரு செய்தியை அனுப்பிய பிறகு அவற்றை நீக்கும் வசதி  ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.இருப்பினும்,இந்த அம்சம் ஒரு மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட செய்திகளுக்கு மட்டுமே நீக்க முடியும்.

இது பயனர்கள் தங்கள் தகவல்தொடர்புகளை நீக்க வாட்ஸ்அப் வழங்கிய ஆரம்ப 8 நிமிட வரம்பிலிருந்து ஒரு மணிநேரத்திற்கு மேலாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் ,இரண்டு நாட்களுக்கு பிறகும் நாம் அனுப்பிய பழைய தகவல்களையும் நீக்கும் புதிய வரம்பை வாட்ஸப் நிறுவனம் கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸப்பீட்டா இன் படி,இந்த புதிய வசதியானது தற்போதைய பீட்டா பதிப்பு 2.22.15.8 இல் சோதனை அடிப்படையில் குறிப்பிட்ட  பயனர்களுக்கு மட்டும்  செய்திகளை நீக்குவதற்கான நேரக் கட்டுப்பாட்டை 2 நாட்கள் மற்றும் 12 மணிநேரம் வரை நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.