யோகி பாபுவுக்கு ஜோடியான ஓவியா.! பூஜையுடன் தொடங்கிய புதிய படம்.!

யோகி பாபு-ஓவியா இணையும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ டைட்டில் லுக் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. தற்போது வலிமை, பிஸ்ட், போன்ற பெரிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தவிற சில திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

ContractorNesamani 4

இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக இயக்குனர் ஸ்வாதிஷ் என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்கிறது.

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்க உள்ளார்.  யோகி பாபு-ஓவியா இணையும் இப்படத்திற்கு “கான்ட்ராக்டர் நேசமணி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

ContractorNesamani 6

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. பூஜையில் எடுக்கபட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.