இந்த இடி எப்போது முழங்கும் என ஓர் மாஸ் அப்டேட் கொடுத்த ஜி.வி-யின் புது பட இயக்குனர்.!

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “இடி முழக்கம் “. இந்த படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். அருள்தாஸ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

கலைமகன் முபாரக் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்து வருகிறார். பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதி வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து தற்போது, இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், படத்திற்கான அப்டேட்டுகள் ஏதும் வெளியாகுமா என காத்திருந்த ரசிகர்களுக்கு, இயக்குனர் சீனு ராமசாமி அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். ஆம், இடி முழக்கம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment