சூரரைப் போற்று படத்திற்கு என்ன சான்றிதழ் தெரியுமா.?

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் டிரைலர் மற்றும், தீம் மியூசிக் இரண்டு பாடல்களும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படம் மே-1 ரிலீஸ் தேதி ஆக இருந்தது ஆனால் தற்போது கொரோனா காரணமாக தற்போது வெளியிடவில்லை ரீலிஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
மேலும் இத்திரைப்படம் தெலுங்கில் “ஆகாசம் நீ ஹதுரா” என்ற பெயரில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்துள்ள நிலையில் தற்பொழுது இந்த சூரரைப் போற்று படத்திற்கு சென்சார்  U சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது, இதனால் அணைத்து சூர்யா ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளார்கள். 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.