நீட் தேர்வு வியாபம் ஊழல் போன்று மாறிவிட்டது – நானா பட்டொலி

நீட் தேர்வு வியாபம் ஊழல் போன்று மாறிவிட்டது – நானா பட்டொலி

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா பட்டோலி, மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீட் தேர்வு வியாபம் ஊழல் போன்று மாறி இருப்பதால், இந்த தேர்வை மகாராஷ்டிராவில் ரத்து செய்ய வேண்டும்.

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. இந்த நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த  நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு குரல் எழுந்ததை தொடர்ந்து, மற்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு குரல் எழுகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா பட்டோலி, மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீட் தேர்வு வியாபம் ஊழல் போன்று மாறி இருப்பதால், இந்த தேர்வை மகாராஷ்டிராவில் ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநில தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நீட் தேர்வு குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின் போது, வினாத்தாள் வெளியாகி பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. சிபிஎஸ்இ போன்ற மத்திய பாடத்திட்ட மாணவர்கள், மாநில பாடத்திட்ட மாணவர்களைவிட அதிக அளவில் நீட் மதிப்பெண்களை பெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube