இந்தியாவில் 130 கோடி மக்களுக்கு இலவசமாக  கொரோனா  தடுப்பூசி…. மத்திய அரசு முடிவு…

இந்தியாவில் 130 கோடி மக்களுக்கு இலவசமாக  கொரோனா  தடுப்பூசி இலவசமாக போட நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு 7 பில்லியன் டாலர்களை (சுமார்  ரூ, 5,16,42 கோடி) ஒதுக்கியுள்ளதாக ப்ளூம்பெர்க்  செய்தியை டைம் ஆப் இந்தியா மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த திட்டம் மூலம்  மத்திய அரசு ஒரு நபருக்கு சுமார்  6 டாலர்முதல் 7 டாலர்கள் வரை ரூ. 450-550 செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளது. ஒரு நபருக்கு இரண்டு ஊசி மருந்துகள் $ 2 அதாவது ரூ. 150 என்று  மத்திய அரசு  மதிப்பிட்டுள்ளது, இது தவிர, தடுப்பூசி சேமித்தல் மற்றும் நாடு முழுவதும் அதன் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்பு செலவுகளாக தனிநபருக்கு 2 டாலர்கள்முதல் 3 டாலர்கள் வரை( ரூ150 முதல் ரூ 225 வரை ) ஒதுக்கப்படும் என்று அறிக்கை கூறியுள்ளது.

இதில், அதிக ஆபத்து உள்ள மக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் போன்ற கொரோனாவுக்கு எதாக போராடும் முன்கள வீரர்களைத் தவிர, வயதானவர்கள் மற்றும் இணை நோயுற்றவர்கள் கூட தடுப்பூசி போட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

author avatar
Kaliraj