31 C
Chennai
Wednesday, July 28, 2021

வேட்பு மனுவில் இருப்பது இரண்டாவது மனைவியின் பெயர்! முதல் மனைவியை கண்டுபிடியுங்கள்! – பிசாஹு லால் சாஹு

வேட்பு மனுவில் இருப்பது இரண்டாவது மனைவியின் பெயர், முதல் மனைவியை கண்டுபிடியுங்கள்.

மத்திய பிரதேசம், அனுபூரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் பாஜக சார்பில் பிசாஹு லால் சாஹுவும், காங்கிரஸ் சார்பில் விஸ்வநாத் சிங்கும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த சாஹு, ‘விஸ்வநாத் சிங் தன்னுடன் வசித்து வரும் பெண்ணின் பெயரைத்தான் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார் என்றும், அவரது முதல் மனைவியின் பெயரை அல்ல, முதல் மனைவி எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடியுங்கள், தற்போது தன்னுடன் இருப்பது இரண்டாவது மனைவி என்று அவர் குறிப்பிடவில்லை என்றும் அவர்  கூறியிருந்தார்.

இதனையடுத்து, இதுகுறித்து பேசிய விஸ்வநாத் சிங், தன்னுடன் வசிக்கும் பெண்ணை 15 வருடங்களுக்கு முன்பே தான் திருமணம் செய்து கொண்டதாகவும், இருவருக்கும் 2 குழந்தைகள் இருப்பதாகவும், சாஹு மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் கூறியிருந்தார். இந்த சம்பவமானது தேர்தலுக்கு முன்பே சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Latest news

Related news