‘சிறுமியின் சாவில் மர்மம்” உறவினர்கள் 3ஆம் நாளாக போராட்டம்…!!

‘சிறுமியின் சாவில் மர்மம்” உறவினர்கள் 3ஆம் நாளாக போராட்டம்…!!

சிறுமி மர்ம சாவில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தேனி அல்லிநகரத்தில் 3-வது நாளாகதொடர்ந்து பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அல்லிநகரத்தில் சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று 3வது நாளாக தொடர்ந்து பெற்றோர், உறவினர்கள்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

அல்லிநகரத்தை சேர்ந்தவர் டிரைவர் ராஜா.இவரின் மகள் ராகவி 7ஆம் வகுப்பு படித்த்து வந்தார். செப்.25 மாலை  இவரின் மகள் ராகவி  வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்,உறவினர்கள் கூறி வந்தனர். தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்தும் சிறுமி மரணம் குறித்த மர்மம் நீங்காததால் சிறுமியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.கலெக்டர் அலுவலகம் எதிரே தேனி -மதுரை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

Image result for கைதுஇந்நிலையில் நேற்று காலை 10:15 மணிக்கு மீண்டும் அல்லிநகரம் – பெரியகுளம் ரோட்டில் 200 பேர் மறியலில் ஈடுபட்டனர். கொலையாளியை கைது செய்யும் வரை சிறுமியின் உடலை வாங்கமாட்டோம் என ஆர்ப்பாட்டம் செய்தனர். தேனி ஏ.டி.எஸ்.பி., சுருளிராஜ், பழனிகுமார் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வழக்கை விரைவாக விசாரிப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.ஆனால் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்காத சூழலில் 3வை நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால் அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *