மதுரை சித்திரை திருவிழா.! வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.!

மதுரை சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு தற்போது நடந்து முடிந்துள்ளது. 

இந்து மதத்தில் இருக்கும் சைவம் – வைணவம் என பிரிவுகளையும் இணைக்கும் நிகழ்வு தான் மதுரை சித்திரை திருவிழா. இந்த திருவிழாவில் மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மற்றும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஒரு சேர் அடுத்தடுத்து நடைபெறும்.

சித்திரைப் திருவிழாவானது, ஏப்ரல் 23இல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கி, பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் என மே 4 வரை நடைபெற்றது. அதே போல, மே 1 முதல் கள்ளழகர் கோவில் விழா நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் அழகர் மதுரையை நோக்கி புறப்பட்டார்.

கள்ளழகர் வேடம் பூண்டு, கண்டாங்கி பட்டுடுத்தி மதுரை வந்தடைந்த அழகருக்கு எதிர்சேவை வரவேற்பு மிக கோலாகலமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்த இன்று காலை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற்று முடிந்துள்ளது.பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட அழகர் வைகை ஆற்றில் ஆற்றில் இறங்கி எழுந்தருளினார். பக்தர்கள் வைகை ஆற்று தண்ணீரை அழகர் மீது தெளித்து வழிபட்டனர்.  கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது பக்தர்கள் சூடம் ஏற்றி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.