, ,

இதுவரை உங்களுக்கு தெரியாத இஞ்சியின் அதிசய நன்மைகள்..!

By

இஞ்சியின் இந்த ஐந்து அதிசய நன்மைகளை இன்று தெரிந்து கொள்ளுங்கள்

   
   

இஞ்சி மிகவும் அதிகமான மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. அதனால் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம். மலச்சிக்கல் முதல் பலவித நோய்களில் இருந்து விடுபட இது உதவியாக இருக்கும்.

இஞ்சியின் ஐந்து நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மலசிக்கல்: கேரட் செடியில் இருக்கும் இலைகள் மற்றும் எலுமிச்சை, இவை இரண்டிலிருந்தும் சாறு எடுத்து அதனுடன் சிறிது உப்பு கலந்து கொள்ளவும். அதனுடன் இஞ்சி சாறு கலந்து சாப்பிட்டால் மிகவும் பலன் கிடைக்கும்.

பசியின்மை: இஞ்சியை பொடியாக நறுக்கி அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். இதனை ஒரு வாரம் தொடர்ந்து தினமும் ஒரு வேளை சாப்பிடவும். இதன் காரணமாக உங்கள் வயிறு சுத்தமாக இருக்கும். பசியும் ஏற்படும்.

ஜலதோஷம், காய்ச்சல், லூஸ் மோஷன் மற்றும் ஃபுட் பாய்சன்: இது போன்ற பாதிப்புகளுக்கு இஞ்சி நன்மை பயக்கும். தினமும் இஞ்சி சேர்த்து கொள்வது மூலமாக உங்களின் செரிமான சக்தி மேம்படும்.

ஒற்றை தலைவலி: இஞ்சியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதனால், ஒற்றைத் தலைவலியின் வலி குறையும்.

அழகு: உங்கள் சருமத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்பொழுது தினமும் காலையில் வெறும் வயிற்றில், ஒரு சிறிய துண்டு இஞ்சியை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் உங்கள் சருமம் பளபளப்பாக இருக்கும்.

Dinasuvadu Media @2023