,

இன்னும் 3 மணிநேரத்திற்கு விடாது மழை… திட்டமிட்டபடி இன்று +2 தேர்வு உறுதி.!

By

Chennai rains

இன்னும் 3 மணிநேரத்திற்கு சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்த வந்த வேளையில் , தற்போது வெப்பத்தை தணிக்க சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

பள்ளிகள் விடுமுறை என்றாலும், 12ஆம் வகுப்பு துணைதேர்வானது திட்டமிட்டபடி, இன்று நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 3 மணிநேரத்திக்கு சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மீனம்பாக்கம் பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.