29 C
Chennai
Wednesday, June 7, 2023

#BiparjoyCyclone: தீவிர புயலாக மாறியது “பிபோர்ஜோய்” புயல்.!

அரபிக்கடலில் வலுவடைந்தது "பிபோர்ஜோய்" புயல். தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய...

Tamil News Live Today: தங்கம் விலை உயர்வு..! சவரன் ரூ.44,800க்கு விற்பனை..!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை...

மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு...

வங்கக்கடலில் வரும் 10ஆம் தேதி புதிய புயல்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.! 

வங்கக்கடலில் வரும் 10ஆம் தேதி புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மே 10ஆம் தேதி புதிய புயல் உருவாகிறது என்றும், அந்த புயலுக்கு மோச்சா (Mocha) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் உருவாகி வங்க தேசம் மற்றும் மியான்மர் நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புதியதாக உருவாகும் இந்த புயலானது முதலில் வடமேற்கு திசை நோக்கியும், அடுத்து வடகிழக்கு திசை நோக்கியும் நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி, தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இந்த
காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.