தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள  புதுக்கோட்டை,சிவகங்கை உள்ளிட்ட  டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு இடி,மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து,மதுரை,விருதுநகர்,ராமநாதபுரம்,கடலூர்,கள்ளக்குறிச்சி,சேலம் தர்மபுரி ,திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும்,இன்று குமரிக்கடல் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகள்,நாளை கேரளா மற்றும் அரபிக்கடல் போன்ற பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,நாளை தமிழ்நாட்டின் வட உள்மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,ஜூன் 6 ஆம் தேதி மேற்குத்தொடர்ச்சி,கடலோர மாவட்டங்கள் ,புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube