#NZvAUS : மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது..!

#NZvAUS : மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது..!

ஆஸ்திரேலிய, நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கான கடைசி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

ஆஸ்திரேலிய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன.

இந்நிலையில், இன்று கடைசி போட்டி நடைபெற இருந்தது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை என்ற முனைப்புடன் போட்டி நடைபெற இருந்தது.  ஆனால், போட்டி துவங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டது.

இரு அணிகளும் இடையே முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 4-ம் தேதி தொடங்க உள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube