இந்திய அளவில் அதிக டிஸ் லைக்குகளை மாஸ்டர் டிரைலர் பெறும்.! மீரா மிதுனின் சர்ச்சை ட்வீட்.!

இந்திய அளவில் அதிக டிஸ் லைக்குகளை மாஸ்டர் டிரைலர் பெறும்.! மீரா மிதுனின் சர்ச்சை ட்வீட்.!

வாரிசு நடிகரான விஜய்யின் மாஸ்டர் டிரைலர் இந்திய அளவில் அதிக டிஸ் லைக்குகளை பெற்ற டிரைலராக மாஸ்டர் டிரைலர் இருக்கும் என்று மீரா மிதுன் கூறியுள்ளார்.

நடிகர் விஜய், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலரை தான். எப்போது மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியானாலும் அதனை வைரலாக்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் சூர்யாவை குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வரும் மீரா மிதுன் மாஸ்டர் டிரைலர் குறித்து பகிர்ந்த ட்வீட் ஒன்று ரசிகர்களை மீண்டும் கடுப்பாக்கி உள்ளது.

சமீபத்தில் வாரிசு நடிகையான ஆலியா பட்டின் "சதக்2" படத்தின் டிரைலர் ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ் லைக்குகளை பெற்றிருந்தது. அதே போன்று வாரிசு நடிகரான விஜய்யின் மாஸ்டர் படத்தின் டிரைலரும் இந்திய அளவில் அதிக டிஸ் லைக்குகளை பெறும் என்று கூறியுள்ளார். இந்த ட்வீட்க்கு பலர் நெகட்டிவ் கமென்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

Latest Posts

சென்னையை வீழ்த்தி டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
சென்னை அணிக்கு 176 ரன்கள் நிர்ணயித்த டெல்லி..!
சீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தீ விபத்து.!
தாமரைபாக்கம் இல்லத்தில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை
பாடகர் எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - முதல்வர்
லடாக்கின், லேவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!
கருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்லி அணி வீரர்கள்..!
டெல்லியில் இன்று 4,061 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!
அனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி - திருமாவளவன்
முழு அரசு மரியாதையுடன் நடைபெற  முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்