நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அனுமதியுடன் நடைபெற்ற திருமணம்…!

நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அனுமதியுடன் நடைபெற்ற திருமணம். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு, வடக்குப்பட்டி  கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் அதே கிராமத்தை சேர்ந்த ராம்கி என்ற இளைஞரை காதலித்துள்ளார். இந்த இளைஞர் கஸ்தூரியை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக அவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இந்நிலையில் காவல்துறையினர் ராம்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் திருமணம் செய்ய மறுத்ததால் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் கஸ்தூரியை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, பிணை பெற்று வெளியே வந்த நிலையில் மீண்டும் திருமணம் செய்து கொள்ளாததால் அவர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரை உயர் நீதிமன்றம் வரை சென்று இவருக்கு ஜாமீன் கிடைக்காத நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வந்த ராம்கி தனது காதலியை திருமணம் செய்து கொள்வதாக நீதிபதியிடம் உறுதியளித்தார். அதன்பின் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி அப்துல் காதர் அனுமதியுடன் வழக்கறிஞர்களும் முன்னிலையில் விநாயகர் கோவிலில் ராம்கி மற்றும் கஸ்தூரிக்கு திருமணம் நடைபெற்றது.

ராம்கி திருமணம் செய்து கொண்டாலும், அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து மதுரை உயர் நீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.