பாஜக மீது அதிருப்தி !அதிமுக தோல்விக்கு அது தான் முக்கிய காரணம் !அமைச்சர் சி.வி. சண்முகம்

பாஜக மீது அதிருப்தி !அதிமுக தோல்விக்கு அது தான் முக்கிய காரணம் !அமைச்சர் சி.வி. சண்முகம்

பாஜக மீதிருந்த அதிருப்தி காரணமாக  அதிமுகவிற்கு தோல்வி ஏற்பட்டது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை அடைந்தது.மக்களவையில் 1 இடத்திலும் ,இடைத்தேர்தலில் 9 இடத்திலும் வெற்றிபெற்றது. இதற்கு முக்கிய காரணம் அதிமுக கூட்டணி தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அதிமுக கூட்டணியில் பாஜக ,பாமக,தேமுதிக,புதிய தமிழகம் ,தமாக,புதிய நீதிக்கட்சி  உள்ளிட்ட கட்சிகள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக படு தோல்வி அடைந்தது.அதிமுக தேனி  மக்களவை தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது.

இன்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,பாஜக மீதிருந்த அதிருப்தி காரணமாக தமிழகத்தில் அதிமுகவிற்கு தோல்வி ஏற்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி கட்சி செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
Join our channel google news Youtube