2.7 C
London
Monday, December 6, 2021

மேஜிக்கல் கப்புல்ஸா? நடிகர்களை புகழ்ந்த இயக்குனர்!

பிரபல தமிழ் நடிகர் சிம்புவும், நடிகை ஹன்ஷிகாவும் இணைந்து நடித்துவரும் படத்தின் பெயர் மஹா. இந்த படத்தை இயக்குனர் ஜமீல் இயக்குகிறார். ஹீரோயினை மையப்படுத்திய இந்தக் கதையில், ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், சாயா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் , சிம்பு மற்றும் ஹன்ஷிகாவின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு பதிலளித்து இயக்குனர் ஜமீல் சிம்பு மற்றும் ஹன்சிகா ரசிகர்கள் பொறுமையாக இருங்கள். விரைவில் மேஜிக்கல் ஜோடி சிம்பு, ஹன்சிகாவின் போஸ்டர் வெளியிடப்படும்’ என்று தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

spot_imgspot_img

Hot Topics

Read More