,

‘இந்தியா’ கூட்டணியின் இலச்சினை இன்று வெளியீடு.!

By

INDIA Alliance

இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது மாநாடு மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட 26 கட்சிகள் பங்கேற்றுள்ள. இன்று நடைபெறும் இரண்டாவது நாள் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று இந்தியா கூட்டணியின் இலச்சினை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூட்டணி செயல் திட்டமும் வகுக்கப்பட உள்ளது.

பாட்னா, பெங்களூருவில் இந்தியா கூட்டணியின் 2 கூட்டங்கள் நடந்து முடிந்த நிலையில், மும்பையில் 3வது ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்

மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து திமுக உள்பட சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இதனால், பாஜக அரசை வீழ்த்த இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டிவருகிறது. அந்த வகையில், இந்தியா கூட்டணியின் இந்த 3வது ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.