பேட்டரியில் இயங்கும் புது ரயில் அறிமுகம்… அதிகாரிகளுக்கு பாராட்டு…

சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட, அரக்கோணம் ரயில்வே மின்சார லோகோ பணிமனையில், மின்சாரம் மற்றும் பேட்டரியில் இயங்கும், ரயில் இன்ஜின் தயாரிக்கப்பட்டுவருகிறது.மேலும்,  சுற்றுச்சூழல் மாசுபடாமல் இயங்கும் இன்ஜினுக்கு, ‘பசுமை’ என, பெயரும்  வைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் இன்ஜின், பேட்டரி மூலம் மூன்றரை மணியில் இருந்து, நான்கு மணி நேரம் வரை இயங்கும் எனவும்,  24 பெட்டிகள் வரை இந்த இன்ஜீனுடன் இணைத்து இயக்க முடியும். இந்த இன்ஜின் 1,080 டன் வரை இழுத்து செல்லும் திறன் கொண்டது. மேலும் இது மணிக்கு, 15 கி.மீ., வேகத்தில் இயங்கும். மின்சார ரயில் பாதைகளில் விபத்து காலங்களில், இந்த இன்ஜின் பயன்படுத்தி, ரயில்கள் இயக்க உதவியாக இருக்கும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று, பேசின் பிரிட்ஜ் — சென்டரல் நிலையம் இடையே, 24 பெட்டிகள் இணைக்கப்பட்டு, வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த இன்ஜினை தயாரித்த, அரக்கோணம் மின்சார லோகோ பணிமனை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் பாராட்டி, அவர்களுக்கு பரிசும் அறிவித்து உள்ளார்.

author avatar
Kaliraj