மாணவர்களின் உயிர் தான் முக்கியம் – பள்ளி திறப்பதற்கான நேரம் இதுவல்ல – செங்கோட்டையன்!

மாணவர்களின் உயிர் தான் முக்கியம் எனவும், பள்ளி திறப்பதற்கான நேரம் இதுவல்ல எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் விரைவில் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அலுவல் ஆய்வுக் கூட்டத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடத்தினார். அதில் பள்ளிகள் திறப்பது எப்போது? பத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் வைக்கலாமா? என பல்வேறு முக்கியமான முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், பள்ளிகள் திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் எனவும் பள்ளிகளை திறப்பதற்கான நேரம் இதுவல்ல எனவும் கூறியுள்ளார். மேலும் அரசு இரு மொழிக் கொள்கையில் உறுதியாக இருப்பதாகவும், பள்ளிகளை ஆய்வு செய்வதில் தாமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். ஆன்லைன் வகுப்புகள் கண்காணிக்கவும், மாணவர்களின் பார்வைத் திறனை அடிக்கடிப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

author avatar
Rebekal