கருத்து சுதந்திரத்தை காக்க தான் சட்டம்…, அதன் குரல்வளையை நெறிக்க அல்ல – நடிகர் சூர்யா!

கருத்து சுதந்திரத்தை காக்க தான் சட்டம்…, அதன் குரல்வளையை நெறிக்க அல்ல – நடிகர் சூர்யா!

சட்டம் கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக தான் சட்டம், அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல என நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒளிப்பதிவு திருத்த மசோதா நிலைகுழுவிற்கு அனுப்பப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இது குறித்து தனது அறிக்கையை நிலைக்குழு சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த திருத்த சட்டத்தில் பல்வேறு விஷயங்கள் இடம்பெற்று வந்தாலும், நான்காவதாக இடம் பெற்றுள்ள புதிய திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதாவது திரைப்படம் ஒரு முறை தணிக்கை செய்யப்பட்ட பின்பு ரிலீஸ் ஆகி விட்டால் பிறகு மத்திய அரசால் கூட அதை திருத்த முடியாது என்ற பழைய திட்டம் மாற்றப்பட்டு, தற்போதைய புதிய மசோதாவில் தியேட்டரில் படங்கள் ரிலீஸ் ஆனாலும் அந்த படத்தை மறு ஆய்வு செய்யும்படி தணிக்கை குழுவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலாம் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்கள் தொடர்பாக பல நடிகர்கள் மற்றும் திரையுலகினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது நடிகர் சூர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக தான், அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல எனக் கூறியுள்ளார். மேலும் இன்று தான் கடைசி நாள் உங்கள் ஆட்சேபனையை தெரிவியுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal
Join our channel google news Youtube