அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்..!!

அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற மே 10 ஆம் தேதி படத்திற்கான முழு  படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது அது என்னவென்றால் அண்ணாத்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற ஜூன் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.