2020 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்! எப்போது தோன்றுகிறது தெரியுமா?

2020 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்! எப்போது தோன்றுகிறது தெரியுமா?

சூரிய கிரகணம் இந்தியாவில் டிசம்பர் 14 அன்று தோன்றுகிறது. இந்த சூரிய கிரகணம் டிசம்பர் 14ம் தேதி இரவு 7:03pm  மணியளவில் தொடங்கி, மறுநாள் (டிசம்பர் 15) 12:23am அளவில் முடிவடையும்.

சூரிய கிரகணம் என்பது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும்போது அது சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம். சூரிய கிரகணத்தின் வகைகள் மூன்று வகைப்படுகிறது. அவை, முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் என வகைப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான சூரிய கிரகணம் இந்தியாவில் டிசம்பர் 14 அன்று தோன்றுகிறது. இந்த சூரிய கிரகணம் டிசம்பர் 14ம் தேதி இரவு 7:03pm  மணியளவில் தொடங்கி, மறுநாள் (டிசம்பர் 15) 12:23am அளவில் முடிவடையும். இந்த சூரிய கிரகணமானது, சுமார் 5 மணி நேரம் நீடிக்கும். இந்த கிரகணத்தின் உச்ச நிலையானது இரவு 9:43 மணிக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஜூன் 21 அன்று நிகழ்ந்தது. இந்தியாவில் சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் நம்மால் சூரிய கிரகணத்தை கண்களால் பார்க்க முடியாது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube