லடாக் எல்லை பிரச்சனை.. இந்தியா-சீனா இடையிலான பேச்சுவார்த்தை தொடக்கம்!

லடாக் எல்லை பிரச்சனை பற்றி தற்பொழுது இந்தியா-சீனா அதிகாரிகள் இடையே “மால்டோ” என்ற இடத்தில் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியது.

கடந்த சில நாட்களாக லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவம் தங்களது படைகளை குவித்து வரும் நிலையில், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தியா-சீனா இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை தற்பொழுது தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளை சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள், “மால்டோ” என்ற இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதில் இந்தியா தரப்பில், லெப்டினன்ட் ஜெனரழும், லே பகுதியின் தளபதியுமான ஹரிந்தர் சிங் மற்றும் சீனா தரப்பில் தெற்கு ஸின்ஜியாங் ராணுவ மண்டல தளபதி மேஜர் ஜெனரல் லியு லின் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். மேலும், இதுகுறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.