முத்தம் காமத்தில் சேர்ந்தது அல்ல, மூன்றாவது கணவருடன் வனிதாவின் ரொமான்ஸ்.!

பீட்டர் பவுல் மனைவியான வனிதாவின் நெற்றியில் முத்தமிடும் புகைப்படம்

By ragi | Published: Jul 04, 2020 08:00 AM

பீட்டர் பவுல் மனைவியான வனிதாவின் நெற்றியில் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

கடந்த சனிக்கிழமை வனிதா விஜயகுமார் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் நடைப்பெற்றது.

அந்த தருணத்தில் வனிதா மற்றும் பீட்டர் பவுல் ஒருவருக்கொருவர் லிப்லாக் செய்த புகைப்படத்தை நெட்டிசன்கள் பலர் விளாசி வந்தனர். மகளின் முன்னிலையில் இவ்வாறு செய்வது தவறு என்றும், இது போன்ற புகைப்படங்களை மகள்களின் வாழ்க்கையை கருதி வெளியிடாதீர்கள் என்றும் தெரிவித்தனர்.

சமீபத்தில் கூட பீட்டர் பவுலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னை விவகாரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும், அவரை குடிகாரர் என்றும், பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும் குற்றஞ்சாட்டி வந்தார். அதற்கு தனது யூடியூப் சேனல் மூலம் பதிலடியும் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பீட்டர் பவுல் வனிதாவின் நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு, அதனுடன் மகள்களை பெற்ற அப்பாகளுக்கு தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்தது அல்ல என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு பலர் ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

 
View this post on Instagram
 

Magalgalai petra appakkulukku thaan theriyum...mutham kaamathil sernthathu illai endru ...,?

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Step2: Place in ads Display sections

unicc