34.4 C
Chennai
Friday, June 2, 2023

புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு…வெயில் கொளுத்தும்…வானிலை மையம் அலர்ட்.!!

புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு என்றும், வெப்ப நிலை இயல்பிலிருந்து...

கர்நாடகாவில் ஜூன் 11 முதல் பெண்களுக்கு இலவச பயணம்! 5 திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல்!

குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ரூ.3,000 உள்ளிட்ட...

கடும் எதிர்ப்பும், தடைக்கும் மத்தியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 200 கோடி வசூல்.!

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி ‘தி கேரளா ஸ்டோரி ‘ திரைப்படம் வசூலில் பல கோடிகளை அள்ளி வருகிறது.

சர்ச்சைகள் முதல் தடைகள் வரை அனைத்தையும் தாண்டி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 200 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. சுதிப்தோ சென் இயக்கியுள்ள இப்படத்தில் அதா ஷர்மா, சித்தி இத்னானி ஆகியோர் நாயகியாக நடித்துள்ளனர்.

the kerala story
the kerala story [Image source : Koimoi]

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் இப்படம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. நேற்று வரை இந்த திரைப்படம் ரூ.198.97 கோடி வசூலித்த நிலையில், இன்று ரூ.200 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

The Kerala Story
The Kerala Story Movie Poster {Image source : Twitter/@sunshinepicture}

சர்ச்சையும் எதிர்ப்பும்:

கடும் சர்ச்சை மற்றும் எதிர்ப்புக்கும் மத்தியில் கடந்த 5ம் தேதி தி கேரளா ஸ்டோரி எனும் பாலிவுட் திரைப்படமானது ஹிந்தி, தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் வெளியாகி ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

TheKeralaStory MPCM
Removal of ban on ‘The Kerala Story’ [Image source : bookmyshow]

இந்த திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி, இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தவகையில், தி கேரளா ஸ்டோரி படத்திற்கு ஒரு சில மாநிலங்கள் வரிவிலக்கை அறிவித்திருந்தன. அதேநேரம் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வேறு சில மாநிலங்கள் இந்தப் படத்தை திரையிட தடையும் விதித்திருந்தது.

The Kerala Story
The Kerala Story [Image source : youtube]
பாக்ஸ் ஆபிஸ்:

சர்ச்சைகளுக்கு மத்தியில் தி கேரளா ஸ்டோரி படம் மே 5 அன்று வெளியிடப்பட்டது.மே 16 அன்று, படம் ரூ.150 கோடியை தாண்டியது. 18 ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸில் படம் ரூ.204.47 கோடியாக உள்ளது.