காஷ்மீரில் நடந்த தாக்குதல் இறந்து போன தாத்தாவின் மீது அமர்ந்து கதறி அழுத சிறுவன்.!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார்.

By gowtham | Published: Jul 01, 2020 12:18 PM

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். அந்த முதியவரின் மீது ஒரு 3 வயது சிறுவன் கதறி அழுவும் காட்சி வெளியாகியுள்ளது. சோபாரில் சிபிஆர்எஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு வந்த பயங்கரவாதிகள், வீரர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 சிபிஆர்எஃப் வீரர்கள் உட்பட, கிராமவாசி ஒருவர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, 5 பேரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,1 சிபிஆர்எஃப் வீரர் மற்றும் ஒரு கிராமவாசி இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதும், பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்ததில் ஒரு சிறுவனும் அவனது தாத்தாவும் அந்தப் பகுதியைக் கடந்து சென்றுள்ளார்கள் அப்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அந்த முதியவருக்கு இரண்டு புல்லட் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயர் தப்பிய சிறுவன் தனது தாத்தாவின் உடலில் மேல் அமர்ந்து இரத்தத்தால் மூடிகொண்டு கதறி அழுது கொண்டிருந்தான் அப்போது சம்பவ இடத்திற்கு வந்தபோது போலீசார் சிறுவனை மீட்டு கொண்டு சென்றனர். தற்போது அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
Step2: Place in ads Display sections

unicc