29 C
Chennai
Wednesday, June 7, 2023

அமெரிக்க பள்ளி பட்டமளிப்பு விழாவில் பயங்கர துப்பாக்கி சூடு.! 7 பேர் சுட்டு கொலை.!

அமெரிக்காவில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மர்ம நபர்கள் நடத்திய...

தெற்கு அமெரிக்காவில் இருந்து செர்பியா புறப்பட்டார் ஜனாதிபதி திரௌபதி முர்மு.!

சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு செர்பியா புறப்பட்டார் குடியரசு...

உருவானது ‘பிபோர்ஜோய்’ புயல்.! 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுபெறுகிறது…

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்...

நாங்க பெத்த குழந்தைக்கு நாங்க பெரு வைச்சிருக்கோம்.! ஜல்லிக்கட்டு தீர்ப்பு.. ஆர்.எஸ்.பாரதி கருத்து.!

ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழகர்களுக்கும் , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் கிடைத்த வெற்றி. – ஆர்.எஸ்.பாரதி பேட்டி. 

நேற்று பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக தொடுத்த வழக்கில் உதைச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை என தீர்ப்பு அளிக்கப்பட்டு, பீட்டா மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து, திமுக கட்சியினர் தாங்கள் ஆட்சி காலத்தில் கிடைத்த தீர்ப்பு என கொண்டாடி வருகின்றனர். அதிமுக கட்சியினர் தங்கள் ஆட்சி காலத்தில் போடப்பட்ட சட்டம் , வழக்கு என கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜல்லிகட்டுக்கு கடந்த ஆட்சி காலத்தில் தடை போடப்பட்ட போதே. எதிர்க்கட்சியாக இருந்த திமுக , சட்டசபையில், நிச்சயம் ஜல்லிக்கட்டை மீட்டெடுப்போம் என கூறியிருந்தது. அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது செய்துள்ளார் என குறிப்பிட்டார்.

சட்ட குழுவினர் மூல துரித நடவடிக்கை எடுத்து அரசு சார்பில் சிறப்பாக வாதாடபட்டு, இந்த வெற்றி கிடைத்ததுள்ளது. இந்த தீர்ப்பு தமிழர்களுக்கும் முதல்வருக்கும் கிடைத்த வெற்றி. என குறிப்பிட்ட அவரிடம், அதிமுக இதனை அவர்கள் வெற்றி என கூறுவது பற்றி பேசும்போது, நாங்க பெத்த குழந்தைக்கு நாங்க பெயர் வச்சிருக்கோம். என கிண்டலாக பதில் கூறினார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.