பாகிஸ்தான் ரகசியங்களை கசியவிட்ட விவகாரம்… இம்ரான் கானுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.! 

By

Former Pakistan Prime Minister Imran Khan
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்டு அவர் தற்போது பஞ்சாப் சிறையில் உள்ளார். இவர் மீது ஏற்கனவே சுமத்தப்பட்ட தோஷகானா ஊழல் வழக்கில் இஸ்லாமாத் நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை நேற்று (செவ்வாய்) இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள்  கொண்ட அமர்வு நிறுத்தி வைத்தது. ஆனாலும் அவர் முழுதாக விடுதலை செய்யப்படவில்லை.
ஏனென்றால், அவர் மீது பாகிஸ்தான் நாட்டின் ரகசியங்களை வெளியில் கூறியதாக ஏற்கனவே ஓர் வழக்கு பதியப்பட்டு அதன் மீதான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வந்தந்து. இந்த வழக்கின் விசாரணையானது, நேற்று அரசின் அனுமதி பெற்று இம்ரான் கான் வசிக்கும் பஞ்சாபில் உள்ள அட்டாக் சிறைக்கு வந்த நீதிபதி அபுவல் ஹஸ்னத் சுல்கர்னைன் விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணையில், இம்ரான் கான் மீது சுமத்தப்பட்ட சைபர் வழக்கில் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவ்லில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.