Thursday, November 30, 2023
Homeதமிழ்நாடுபுகாரின் அடிப்படையில் தான் சோதனை நடைபெறுகிறது - அண்ணாமலை

புகாரின் அடிப்படையில் தான் சோதனை நடைபெறுகிறது – அண்ணாமலை

திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எ.வ.வேலு அவர்களுக்கு எப்போதோ ரெயிடு வந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு ரெயிடு நடத்துகிறார்கள். இந்தியாவில் எங்கையும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் ஊழல் அதிகமாக உள்ளது.

திமுகாவில் அரசியல்வாதி என்கின்ற அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள். தங்களுடைய அதிகாரத்தை அவராக பயன்படுத்தி சம்பாதிக்கிறார்கள். இதில் ரெயிடு நடந்தா என்ன தப்பு. புகாரின் அடிப்படையில் தான் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!

இலங்கை பயணம் கொண்டபோது அங்கு இருக்கக்கூடிய உள்துறை மற்றும் வழித்துறை அமைச்சர்களிடம், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் மீனவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட படங்களை விடுவிக்க வேண்டும் என்றும் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக விரைவில் நல்ல முடிவு வரும் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தான் கொடியேற்றினால் கைது செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பாஜக நிர்வாகிகள் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலோ அல்லது மற்ற அரசியல் கட்சி கொடிகள் ஏற்றிய இடத்திலோ புதிதாக கொடியேற்றினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கண்டனத்திற்குரியது. இதற்கு என்ன காரணம் என்றால் பாஜகவை கொண்டு திமுக அஞ்சுகிறது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் உரிய நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.