இன்றைய பலப்பரீச்சையில் இந்திய அணி, ஆஸ்திரேலியா அணி மோதுகிறது

இந்திய அணி தனது முதல் போட்டியை தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தனது முதல் வெற்றியை பதித்தது.
இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியா அணியுடன் மோத உள்ளது. ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே விளையாடிய 2 போட்டியில் வெற்றி பெற்று தற்போதைய உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த அணியாக உள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியானது லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடக்க உள்ளது.
இந்த இரு அணிகளும் இதுவரை ஒருநாள் போட்டியில் 136 போட்டிகளில் விளையாடி உள்ளது.அதில் இந்திய அணி 49 போட்டிகளிலும்,ஆஸ்திரேலியா அணி 77 போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது. 10 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
மேலும் உலக்கோப்பையில் 11 போட்டிகளில் விளையாடி உள்ளது.அதில் இந்திய அணி 03 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா அணி 08 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.  இந்த அணிகளும் இங்கிலாந்தில் மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்திய அணி 01 போட்டிகளிலும்,ஆஸ்திரேலியா அணி 02 போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.
 
 
 
 
 

author avatar
murugan