20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ரூ.62,361 கோடியை திருப்ப அளித்த வருமானவரித்துறை 

20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ரூ.62,361 கோடியை திருப்ப அளித்த வருமானவரித்துறை 

ரூ.62,361 கோடியை 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு திரும்ப அளித்துள்ளது  வருமான வரித் துறை.

கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் அதிகம் நிலவி வருகிறது. இச்சமயத்தில் வரி செலுத்துவோருக்கு உதவும் நோக்கத்தில் நிலுவையில் உள்ளதொகையைத் திரும்பி வழங்குவதற்கான பணியில் வருமான வரித்துறை ஈடுபட்டுள்ளது.

அதாவது,கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை 1 நிமிடத்துக்கு 76 கோப்புகள் என்று வீதத்தில் தொகையை  திருப்பி  வழங்கியுள்ளது. மொத்தம் 20.44 லட்சம் வரி செலுத்துவோரின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு  ரூ.62,361 கோடி திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.இது குறித்து  சம்பந்தப்பட்ட நபா்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.1.36 லட்சம் பேருக்கு பெரு நிறுவனங்கள் வரிப் பிடித்தத்தில் இருந்து  ரூ.38,908.37 கோடி திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.19.07 லட்சம் பேருக்கு   தனிநபா் வருமான வரிப் பிடித்தத்தில் இருந்து ரூ.23,453.57 கோடி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube