கார்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஹூன்டாய் இந்திய நிறுவனத்தில்  சான்ட்ரோ என்ற புதிய வகை காரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது. இந்த புதிய வகை ஹூன்டாய் சான்ட்ரோ கார் ரூ.3.89 லட்சம் எனும் துவக்க விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், டாப்-என்ட் வேரியன்ட் விலை சுமார் ரூ.5.45 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 10_ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் புதிய சான்ட்ரோ காரை வாங்க இதுவரை சுமார் 57,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.