மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்த விவகாரம்.! வன்கொடுமை தடைச்சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியை கைது.! 

குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவியர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை கீதா ராணி கைது செய்யப்பட்டுள்ளார். 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பாலக்கரை பகுதி அரசு தொடக்கப்பள்ளியில் 32 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இவர்களில் குரிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் மட்டும் தலைமை ஆசிரியை உத்தரவின் பேரில் கழிவறை சுத்தம் செய்து வந்ததாக தெரிகிறது.

இதில், மாணவ மாணவியரின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியை கீதா ராணி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் மீது வழக்கு போடப்பட்டது. இதனை அடுத்து தலைமை ஆசிரியை தலைமறைவாகி இருந்தார்.

இந்நிலையில் தற்போது பெருந்துறையில் இருந்த தலைமை ஆசிரியை கீதாராணியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவியரிடம் வட்டார கல்வி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment