"Release Nandhini " என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்!

சமூக போராளி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி “Release Nandhini “ என்ற ட்விட்டர் பதிவானது இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
சமூகத்தில் இருக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மதுவுக்கு எதிராகவும் தொடர்ந்து தன் தந்தையுடன் குரல் கொடுத்து வருபவர்.
மதுரையில் சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த போது மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தின் போது அதிகாரிகளை தாக்கியதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. 2014ம் ஆண்டு தொடுக்கப்பட்ட அந்த வழக்கானது சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்துவந்தது. கடந்த புதன் கிழமையில் விசாரணைக்கு வந்த வழக்கில், சாட்சியாக இருவர் இருந்துள்ளனர். இறுதியாக, நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோரை சிறையில் அடைக்க நீதிபதி சாமுண்டீஸ்வரி உத்தரவிட்டார்.
 

ஜூலை 5 ம் தேதி போராளி நந்தினி அவர்களுக்கு குணா என்பவருடன் திருமணம் நடக்க இருக்கும் சூழ்நிலையில் திட்டமிட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.