இந்திய அரசு உடனே இதை செய்ய வேண்டும் -ராகுல் காந்தி

இந்திய அரசு உடனே இதை செய்ய வேண்டும் -ராகுல் காந்தி

கொரோனா தடுப்பூசி ஏற்றுக் கொள்ள கூடிய விலையில் இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது.முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றது.எனவே இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும். இதற்கு தெளிவாக வரையறுக்கப்பட்ட யுக்தி, அனைவருக்கும் கிடைக்ககூடிய மற்றும் ஏற்றுக் கொள்ள கூடிய விலையில் இருக்க வேண்டும். இந்திய அரசு உடனே இதை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.