அரசு அதை செய்யவில்லை, நாங்கள் செய்கிறோம்., இது புரியாமல் பேசுகிறார் – துணை முதல்வருக்கு ஸ்டாலின் பதிலடி

அரசு கிராம சபை கூட்டத்தை கூட்டவில்லை என்று தான் திமுக நடத்தி வருகிறது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவெற்றியூரில் அதிமுக சார்பில் மொழிப்போர் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கிராம சபை கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட அதிகாரிகள் தான் நடத்த வேண்டும். அதைவிட்டு ஸ்டாலின் நடத்துகிறார். சம்மணங்கால் போட்டுகொண்டு கூட்டத்தை நடத்துகிறார். கிராம சபை கூட்டத்தை நடத்துவதற்கு ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா? என்று விமர்சித்திருந்தார்.

இதையடுத்து, துணை முதல்வர் பேச்சுக்கு பதிலடி கொடுத்த திமுக தலைவர் முக ஸ்டாலின், கிராம சபை கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் நடத்துகிறார். கூட்டத்தை நடத்த இவருக்கு என்ன அதிகாரம் இருக்கு, அரசாங்கம் தான் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என துணை முதல்வர் பேசியிருக்கிறார். அரசு கிராம சபை கூட்டத்தை கூட்டவில்லை என்று தான் திமுக நடத்தி வருகிறது. இதுகூட புரியாமல் பேசியுள்ளார். கிராம சபை கூட்டத்தை அரசின் சார்பில் தான் நடத்த வேண்டும்.

அதை நான் மறுக்கவில்லை. ஆண்டுக்கு 4 முறை கூட்டத்தை கூட்ட வேண்டும். காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மே 1 தொழிலாளர் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டும். இதுதான் மரபு, அரசின் சார்பில் கலைஞர் முதல்வராக இருந்தபோது, இந்த நடைமுறை தான் பின்பற்றப்பட்டது. ஆனால், தற்போது உள்ள இந்த ஆட்சியில், கடந்த 10 ஆண்டு காலத்தில் அந்த நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றசாட்டியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்